| அமிருத கலையும் பரத்தின் கலையும் |
|
|
|
|
வர்ம-சித்த செயல்பாட்டு விளக்க பட்டறையை கடந்த மே மாதம் 2010 இல் விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் நடத்தியது. இந்த பட்டறையில் இந்த மருத்துவ சிகிச்சையின் தத்துவார்த்த சட்டகத்தை விளக்குகிறார் டாக்டர்.வே.கணபதி அவர்கள்:
உள்-சூத்திரம் புற சூத்திரம் என்றால் என்ன? உள் சூத்திரம் என்பது உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையும் விளக்கும் விசயமாகும். இதில் சகஸ்ராதாரமும் அடங்கும். புற சூத்திரம் என்பது இந்த ஏழு ஆதாரங்களையும் இயக்குவதற்கு துணை நிற்பவற்றை விளக்குவது. இடகலை பிங்கலை என்பவை கீழ் ஆதாரங்களில் செயல்படுவன. மேல் ஆதாரங்களில் மூன்று கலைகள் செயல்படுகின்றன. அவை சிவகலை சக்தி கலை மற்றும் பரகலை. இதில் சிவகலை நான்கு, சக்தி கலை எட்டு. இந்த பன்னிரண்டுடன் பரகலை ஒன்று. இவை செயல்படுவதைப் படிப்பதே உள்சூத்திரம் அல்லது பிரம்ம ரகசியம். இதையே அமிர்த நிலை ரகசியம் என்றும் கூறுகிறோம். ஆகவே அமிர்த நிலை ரகசியத்தை தெரிந்து கொள்ள பரத்தின் கலையை தெரியவேண்டும். அதற்கு அற வாழ்க்கை அவசியம். அந்த அறவாழ்க்கை வாழ சித்த மருத்துவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய அருட்கொடை. இந்த இயக்கங்களை அலங்கரிக்கப்பட்ட ஒரு சப்பரத்துடன் (தேருடன்) ஒப்பிடலாம். அந்த தேராக இருப்பது சிவகலையும் சக்தி கலையும். தேர்வடமாக இயங்குவது பிராணகலை. அதன் இயக்க சக்கரங்கள் பஞ்ச பூதங்கள். இந்த சப்பரத்தில் தெய்வாம்சமாக இருப்பது அமிர்த கலை.
Powered by !JoomlaComment 3.26
3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved." |
Shakthi Surabhi is a Bio-Methanation plant that can be used to convert the household organic waste into cooking gas. Apart from that it also provides nutrient rich slurry. This documentary shows how the plant is installed; working of the plant; users' experiences and also how to maintain it for optimal conditions.
வீட்டுக்கழிவுகளை எரிவாயுவாக மாற்றும் கலனின் செயல்பாடும் பயன்பாடும் குறித்த ஒரு அறிமுக விவரண படம்.